2026-ம் ஆண்டில் 3 சிறப்பு TET தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வாணையம் (TRB) முதல் உத்தேச தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் சிறப்பு TET தேர்வு ஜனவரி 24 அல்லது 25-ம் தேதியில் இருந்து நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கான துல்லியமான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2011-ம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்காகவே இந்த சிறப்பு TET தேர்வுகள் நடத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது