தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
நடிகர் விஜயின் இரண்டாவது மாநில மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல் முயற்சியில் வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
தன்னுடைய முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக மிக பிரம்மாண்டமாக விஜய் நடத்தி முடித்த நிலையில் இன்று இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் பேசிய விஜய், 2026 தேர்தலில் திமுக தவெக இடையே தான் போட்டி என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தாமரை இலையில் தண்ணீரை ஒட்டாது. அப்படி இருக்கும்போது தமிழக வெற்றி கழகம் எப்படி ஒட்டும் என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நேரடி அடிமை கூட்டணியுடன் ஒருபோதும் தமிழக வெற்றிக்கழகம் இணையாது. எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக தற்போது பொருந்தா கூட்டணியுடன் சிக்கி தவிக்கிறது. சஸ்பென்சிலயே சஞ்சாரம் செய்யுங்கள் என விஜய் கூறியுள்ளார்.
