சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கத்தில் ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் கத்தியால் கழுத்தை அறுத்ததால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண் மற்றும் அவரது நான்கு வயது மகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.