அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியும் அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் சற்று நேரத்தில் திமுகவில் இணைவதாக செய்தி வெளியான நிலையில் தற்போது இணைந்துள்ளார். அதிமுக கட்சி இரண்டாக உடைந்த போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்த அவர் அதன் பிறகு பின்னர் பாஜகவில் இணைந்தார்.
அதன் பிறகு கடந்த வருடம் மீண்டும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து தற்போது விலகி திமுகவில் அவர் இணைய இருப்பதாக செய்தி வெளியான நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து 2002, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார்.
அதிமுக பிளவுக்கு பிறகு சிறிது காலம் பாஜகவில் இணைந்த அவர் பின்னர் ஓ பன்னீர் செல்வத்துடன் பணியாற்றிய பின்னர் மீண்டும் அதிமுகவுடன் இணைந்தார். இந்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். மேலும் சமீப காலமாக அதிமுக கட்சியின் முக்கிய புள்ளிகள் விலகி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
