தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறது. அந்த வகையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கருணைத்தொகையாக தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் என அதிரடியாக ஜெயலலிதா பிறந்தநாள் ஆன இன்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இலவச சிலிண்டர், பெண்களுக்கும் மாதம் 2000 ரூபாய், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க மானியம், அனைவருக்கும் வீடு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாயும் 12-ஆம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
