அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மிக முக்கியமான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்பதுதான் அந்த மெகா அறிவிப்பு. இது அதிமுகவின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதியாக வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள திமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விலைவாசி உயர்வு பாதிப்பில் இருந்து ஏழை, எளிய குடும்பங்களை மீட்கவும், அவர்களுக்கு ஒரு பெரிய நிதியுதவியாக இருக்கவுமே இந்த 10,000 ரூபாய் திட்டம் கொண்டு வரப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
