திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டு, இன்று மாலை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்டெடுத்த இந்த வெற்றியை ஆன்மீக ரீதியாகக் கொண்டாட அவர் விடுத்த இந்த அழைப்பிற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நயினார் நாகேந்திரனின் இந்த வேண்டுகோளை ஏற்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தனது இல்லத்தில் அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வீட்டின் வாசலில் “வெற்றிவேல்! வீரவேல்!” என மாக்கோலமிட்டு, தீபம் ஏற்றி முருகப் பெருமானை வழிபட்டார். ஒரு மூத்த தலைவராக அவரே முன்வந்து இதனைச் செய்தது, தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
