தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு தனி அடையாளம் கிடைத்து அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து உன்னை நினைத்து படத்தில் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த நிலையில் அவரை வைத்து இரண்டு பாடல்கள் இயக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் விஜய் அந்த படத்தில் இருந்து விலக பின்னர் சூர்யாவை வைத்து விக்ரமன் அந்த படத்தை இயக்கினார். இந்தப் படம் அப்போது சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அவரை ஒரு முன்னணி நடிகராகவும் உயர்த்தியது.
இந்த படத்தில் சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த நிலையில் தற்போது விக்ரமன் உன்னை நினைத்து படத்தில் விஜய் வைத்து இயக்கிய பாடலை வெளியிட்டுள்ளார். மேலும் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சிறந்த நடிகர்கள் என்றும் இந்த பாடலை வைத்து அவர்களை ஒப்பீடு செய்து பார்க்க வேண்டாம் எனவும் விக்ரமன் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த பாடலை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Actor #Suriya‘s Unnai Ninaithu Movie First Choice & two Song Recored 🎶 Relesed By #Vikraman Director
Feel Good Movie 😍 Missed @actorvijay na 😩#ThalapathyVijay #JanaNayaganPongal #JanaNayagan #JanaNayaganAudioLaunch #Karuppu pic.twitter.com/nIEFAgOpUj
— Thulasi Raman✨ (@ThulasiramanOG) January 6, 2026
