தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா, தனது சிறப்பான நடிப்பால் மட்டுமல்லாமல், ரசிகர்களிடம் காட்டும் அன்பான அணுகுமுறையாலும் தொடர்ந்து மக்களின் மனங்களை வென்று வருகிறார். சமீபத்தில் அவர் தனது தீவிர குட்டி ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அந்த சிறுவன் சூர்யாவைப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சியும், சூர்யா அவரிடம் காட்டிய கனிவான அரவணைப்பும் காண்போரை நெகிழச் செய்துள்ளது. சூர்யாவின் இந்த எதார்த்தமான குணத்தை இணையவாசிகள் பாராட்டித் தள்ளி வருகின்றனர். சினிமா படப்பிடிப்புகள் மற்றும் தனது அகரம் அறக்கட்டளை பணிகளுக்கு மத்தியில், ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி சூர்யா மேற்கொண்ட இந்தச் செயல் அவரது எளிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

“>

இது பொதுவாக திரையில் மாஸ் காட்டும் சூர்யா, நிஜ வாழ்க்கையில் ஒரு குட்டி ரசிகருடன் சகஜமாக உரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்ட தருணங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. தனது ஆதர்ச நாயகனை நேரில் கண்ட அந்த சிறுவனின் புன்னகையும், அந்தத் தருணத்தை சூர்யா கையாண்ட விதமும் ‘ரியல் ஹீரோ’ என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.