நடிகர் எஸ்.ஜே. சூர்யா இப்போது ‘கில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சியொன்றில் நடித்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு இரும்புக் கம்பி அவரது காலில் பலமாக மோதியது. இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டதால், பதற்றமடைந்த படக்குழுவினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

எஸ்.ஜே. சூர்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கட்டாயம் 15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால், அவர் குணமடையும் வரை ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.