நடிகரும் இயக்குநருமான SJ சூர்யா படப்பிடிப்பில் காயமடைந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மார்க் ஆண்டனி’, ‘ராயன்’ என அடுத்தடுத்த வெற்றிகளால் பிஸியாக இருக்கும் SJ சூர்யா, தற்போது ‘கில்லர்’ (Killer) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் விறுவிறுப்பான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்புக் கம்பி ஒன்றில் மோதி SJ சூர்யாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயத்தால் துடித்த அவரைப் படக்குழுவினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காலில் ஏற்பட்ட காயத்திற்காகச் சிகிச்சை அளித்தனர்.
மேலும், அவர் கட்டாயம் 15 நாட்கள் முழு ஓய்வில் (Bed Rest) இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
