2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி 2391 கோடி ரூபாய், நகை கடன் தள்ளுபடி ஆயிரம் கோடி மற்றும் சுய உதவி குழு கடன் தள்ளுபடி 600 கோடி என மொத்தம் 3993 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு 305 கோடி ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு நலத்திட்டங்களுக்கு ரூ.1580 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது