வியட்நாமின் மிகப்பெரிய தீவான ஃபூ குவோக் கடற்பகுதியில் சுற்றுலாப் படகு ஒன்று எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயரமான சம்பவத்தில், படகில் பயணித்த 32 இந்தியர்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த பகுதியில் உள்ளூர் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய 32 பேரில் சுமார் 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து தப்பித்த நிர்மல் குமார் என்பவர் உயிரிழந்த 15 பேரில் கிட்டத்தட்ட 8 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
