அதிமுக பேச்சாளரும் ‘நமது அம்மா’ ஆசிரியருமான கல்யாணசுந்தரம் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற காரை மோதியதில் விபத்து ஏற்பட்டது. கார் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் அவர் லேசான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.