வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனுமதியில்லாத இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை உறுதி செய்யவும் மக்கள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
