மதுரையில் நடைபெறவுள்ள  (த.வெ.க.) மாநாட்டை முன்னிட்டு, நடிகர் விஜய்யைத் தவிர வேறு எந்த முக்கிய பிரமுகரும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என்று கட்சி தரப்பு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறையினரின் கேள்விகளுக்கு அளித்த பதிலில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்காக தனியாக பெண் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் த.வெ.க. தெரிவித்துள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், அமைதியான சூழலில் நிகழ்ச்சி நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி தரப்பு வலியுறுத்தியுள்ளது.