கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நேரில் பார்வையிடும் நோக்கத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 28) காலை கரூர் செல்கிறார். இந்நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் திட்டத்துடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் விதமாகவும் பிரசாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
