கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட பரபரப்பான கூட்ட நெரிசலில் 6 குழந்தைகள், 9 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என மொத்தமாக 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேரழிவில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் உத்தரவுப்படி, அனைத்து மருத்துவ வசதிகளும் அவசரகால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
