கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர்   மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் மேலும் வருவதால், பலி எண்ணிக்கை 50ஐ தாண்டக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் துயரத்தில் கதறி அழும் சூழ்நிலை காணப்படுகிறது. சம்பவத்திடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விசாரணை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.