கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நேரத்தில், தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவாக உத்தரவிட்டுள்ளார்.
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் – மாவட்ட…— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 27, 2025
“>
தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கரூரில் இருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன என்றும், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது குறித்து அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
