நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று கட்சியின் முதல் நபராக விஜய் உறுப்பினராக இணைந்தவுடன் அவரது ரசிகர்கள் மளமளவென்று இணைய தொடங்கினர். இதனால் செயலி முடங்கியது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் 20 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் 50 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.