தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என அந்த கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது நடிகர் விஜய்க்கு நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பியதோடு அவருக்கு தலைமை பண்பு இல்லை என்றார். அதாவது பொதுமக்கள் துயரத்தில் இருந்தபோது அனைத்து கட்சிகளும் இறங்கி உதவி செய்த போது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழக வெற்றிக் கழகத்தினர் உட்பட அந்த கட்சியின் தலைவர் அனைவரும் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டதாக கூறிய நீதிபதி தமிழக வெற்றி கழகத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

இதற்கிடையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அந்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். மேலும் புஸ்ஸி ஆனந்த்  தலைமறைவாக இருக்கும் நிலையில் தற்போது அவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் கைதாவர்கள் என்று கூறப்படுகிறது.