தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. அதன் பிறகு விஜயின் பரப்புரை வாகனத்தின் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டதாக வந்த செய்திகளை தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது விஜயின் பிரச்சார வாகன ஓட்டுனர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று விஜயின் பரப்புரை வாகனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பைக் ஓட்டி சென்ற இருவர் மீதும் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இதன் காரணமாக விஜயின் பிரச்சார வாகனம் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.