தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களது முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் ரத்து செய்தது. இவர்கள் இருவரும் தலைமறைவாக இருக்கும் நிலையில் தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

அதாவது கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் தற்போது புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த மனு  விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.