விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் உள்துறை மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வாக்களிக்காத ஊழியர்களின் விடுப்பு கணக்கிலிருந்து ஒரு நாள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.