லட்சத்தீவு தொகுதி எம்.பி முகமது பைசலின் தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெற்றது மக்களவை செயலகம். கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. கவரட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ராகுல் மேல்முறையீடு செய்து தடை வாங்கினால், அவரது தகுதிநீக்கவும் ரத்தாக வாய்ப்புள்ளது