நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு ஓர் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயமாக e-KYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். இந்தச் செயல்முறையை முடிக்காதவர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் அரசு திட்டச் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
e-KYC செயல்முறையை முடிப்பதற்கு ரேஷன் கடைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. “MERA KYC” மற்றும் “FACE RD” போன்ற செயலிகள் மூலம் உங்கள் செல்போனிலேயே சுலபமாக ரேஷன் கார்டு e-KYC-ஐ அப்டேட் செய்யலாம். எனவே, இதுவரை இந்தச் செயல்முறையை முடிக்காத ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக இதைச் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
