வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ % உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘ரிசர்வ் வங்கியிடம் மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி 6.5%ஆக தொடரும்’ என்றார். RBIயின் அறிவிப்பால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.