தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் தனது மனைவிக்கு ரூ.12.60 கோடி வழங்கியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அவரது வேட்புமனுவை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்தது. வேட்புமனு ஆய்வு தொடர்பான புகாருக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு விஜய் மற்றும் அவரது கட்சியினர் இடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.