சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 14,182 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,456 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 274 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 20000 ரூபாய் வரையில் அதிகரித்து 2 லட்சத்து 74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
