நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறார். மேலும் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியது குறித்து ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘வாழ்த்துக்கள்’ என கூறி சென்றார். தற்போது ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட நடிகர் விஜய் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.