காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் SIR பணிகளுக்காக பூத் ஏஜெண்டுகளுக்கு பாஜக மேலிடம் பணம் அனுப்பியது. இந்த பணத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சொந்த கட்சி நிர்வாகி செல்வமணியின் வீட்டை பாஜக நிர்வாகி பிரகாஷ் உட்பட ஐந்து பேர் அடித்து நொறுக்கினர்.

 

மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக தலைவர் அமர்நாத் சொல்லித்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து தற்போது பாஜக நிர்வாகம் இளைஞர் அணி மாநில தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளது.