தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2026 தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு பெறுவோம் என்று தெரிவித்துள்ள நிலையில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் அதிக தொகுதிகள் வேண்டுமென்று கேட்டுள்ளார். அவர் 20 சீட்டுகள் வேண்டுமென்று கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதேபோன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் திமுக கூட்டணியில் 16 தொகுதிகளை கேட்போம் என்று கூறியுள்ளார். மேலும் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் இது திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட அந்த கட்சியில் 16 கூட்டணிகள் இருப்பதால் தொகுதி பங்கீடு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இதில் முதல்வர் ஸ்டாலின் எடுக்க போகும் முடிவை அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்கி கவனித்து வருகிறது.
