தமிழக வெற்றிக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று கூறி வருகிறார். செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கிய நிலையில் அவர் எந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.

 

இந்த நிலையில் காங்கேயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் என் உடம்பில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் விஜய்க்காக தான் என கண்ணீர் மல்க பேசினார். வழி தெரியாமல் நின்ற எனக்கு வழிகாட்டியவர் விஜய் தான். மேலும் அதிமுகவில் தன்னால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரை தன்னை வெளியேற்றி விட்டார் எனவும் எடப்பாடி பழனிச்சாமியை சாடினார்.