தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க 2 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தைப் பெறுவதற்காக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று திருமாவளவனைச் சந்தித்துள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களும் இணைந்ததால் தவெக கூட்டணியின் பலம் 118-ஆக உயர்ந்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

மே 10-ஆம் தேதிக்குள் பதவி ஏற்பதில் இருந்த சட்டச் சிக்கல்கள் மற்றும் முட்டுக்கட்டைகள் இதன் மூலம் விலகியுள்ளதால், நடிகர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தற்போது செம ஹாட்டாக மாறியுள்ளது.