கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம்விளைவிப்பதாகவும், அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் கூறி நெல்லை எம்பி ஞான திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் 7நாளுக்குள் விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால், ஒழுங்கு (கட்சியிலிருந்து நீக்கம்) நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அவரை கட்சியில் இருந்து நீக்க தலைமை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.