கடந்த சில மாதங்களாக தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்றை போல் , இன்று (ஆகஸ்ட் 27) மீண்டும் உயர்வு கண்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 அதிகரித்து ₹ 9,390 க்கும், ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து ₹75,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு, நகைத் துறையினரும் பொதுமக்களுக்கும் கவலை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதும், இந்திய பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளதும் காரணமாக, தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.
