சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை 480 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேப்போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 10004 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80032 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 126000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.