அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் பேசியதாவது, அதிமுக கட்சி என்பது உங்களுடைய அரசு மற்றும் உங்களுடைய கட்சி அது மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி. ஆனால் திமுக கொள்ளை அடிக்கும் காட்சி. இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை கஞ்சா இல்லாத இடமே இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் போதை ஆசாமி பள்ளி சிறுமியை தூக்கிட்டு போறான். பிள்ளை கதறும்போது அந்த அப்பா எங்கே போனார்.

அப்பான்னு சொன்னா மட்டும் போதுமா இன்னும் குற்றவாளியை கூட கண்டுபிடிக்கல. நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை பேசுகிறேன் என கூறுகிறார். யார் பொய் சொல்கிறார் நான் உண்மையை மட்டும் தான் சொல்கிறேன். நாங்கள் வந்தால் மக்களுக்கு நல்லாட்சியை கொடுப்போம். மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது அதிமுக மிரண்டு ஓடப்போவது திமுக. இந்த திமுக ஆட்சியில் பள்ளி சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை. மேலும் கண்டிப்பாக அதிமுக ஆட்சி அமைந்து தமிழகத்தை காப்போம் என்று கூறினார்.