தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை கட்டாயமாக இணைக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.