மதுரை மாநகராட்சியில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் மாநகராட்சி பணியில் இருந்தவர்களை மொத்தமாக ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பிறகு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மீது ஏராளமான புகார்கள் குவிந்ததை அடுத்து சமீபத்தில் அவரை திமுக மேலிடம் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி வரி முறை கேடு வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பொன்வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.