தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியை இணைப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

அந்த வகையில் திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சிகளில் இருப்பவர்களை கட்சியில் இணைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கரூர் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆயில் ரமேஷ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.

இதே போன்று அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரண்ராஜ், கவின் மற்றும் சிவபாலன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் செந்தில் பாலாஜி பிற கட்சிகளில் இருப்பவர்களை தொடர்ந்து திமுகவில் இணைத்து வருகிறார்.