திமுக கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீவைகுண்டம் சக்திவேல் உடல்நலக் குறைவினால் மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய x பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் தேதி உடல்நிலை குறைவினால் சக்திவேல் தன்னுடைய வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த போது எம்பி கனிமொழி அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது வீடியோ கால் மூலமாக முதல்வர் ஸ்டாலின் அவரிடம் நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சக்திவேல் உடல்நல குறைவினால் மரணமடந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவில்,தன்னலங்கருதா உழைப்பால் தமது இறுதி மூச்சு வரையிலும், கழக உணர்வூட்டிய பெருந்தகையாளர் திரு. சக்திவேல் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.
தி.மு.க.காரர் என்கிற சொல்லுக்கு பொருள்கூற வேண்டுமென்றால், திரு. சக்திவேல் அவர்களைக் காட்டினால் போதும் எனுமளவுக்கு, உடன்பிறப்புகளின் முகவரியாய் இணையத்தில் பதிவாகி, எத்தனையோ பேருக்கு உதவி, பயனுள்ள நிறைவாழ்வை வாழ்ந்து மறைந்துள்ளார் திரு. சக்திவேல் அவர்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்! என்று பதிவிட்டுள்ளார்.
