தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் அமீர்கான், நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் இந்தத் திரைப்படத்தின் மோனிகா பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரெய்லர் டீசர் போன்றவைகளும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கூலி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி நள்ளிரவு 2 மணியளவில் முடியும்வரையில் மொத்தம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.