மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக வைகோ கீழே விழுந்து விட்டதால் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் மதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
