சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்தது. இந்நிலையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு இனி அனைத்து மருத்துவமனைகளிலும் Tag முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதாவது நோயாளிகளுடன் வருபவர்கள் கைகளில் Tag அணிந்திருப்பது கட்டாயம் எனவும் அவர்கள் மட்டும்தான் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 விதமான வண்ணங்களில் கைப்படைகளை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

அதன்படி, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை பார்க்க வருபவர்களுக்கு சிவப்பு நிறமும், சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்கு மஞ்சள் நிற டேக்கும், சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுடன் வருபவர்களுக்கு பச்சை நிறமும், பொது மருத்துவ பிரிவில் இருப்பவர்களுடன் வருபவர்களுக்கு நீல நிற டேகும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.