வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அரசு இப்படி ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.