திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சின்னசாமி தற்போது மரணமடைந்தார். இவர் கடந்த 1971, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றார்.

இவர் மறைந்த திமுக கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவராக அறியப்பட்டவர். இவர் தர்மபுரி மாவட்ட செயலாளர் பதவி உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் கட்சியில் இருந்துள்ளார். மேலும் இவர் தற்போது உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவுக்கு திமுக கட்சியின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.