அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் தற்போது இதற்கு கட்டணம் தெரிவிக்கும் விதமாக அவர்களது உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனக்கு நயன்தாரா வேண்டும் என்றும் தன்னுடைய கனவை முதல்வர் நிறைவேற்றுவாரா என்றும் தனக்கு திருமணம் செய்து வைப்பாரா என்றும் சர்ச்சையாக பேசி இருந்தார்.
அதன் பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாவாடை இல்லாமல் எப்படி சேலை கட்ட முடியும் என பெண்கள் கேட்பதாக சர்ச்சையாக பேசினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திமுகவின் விமர்சிப்பதாக கூறி பொதுக்கூட்டத்தின் போது அருகில் இருந்த ஒரு பெண்களை கைகாட்டி இந்த பிள்ளைகள் போல் குண்டா இருக்கிறது பார் அதுதான் பூசணிக்காய் என்கிறார்கள் என்றார்.
மேலும் அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக கூறி உருவ கேலி செய்யும் விதமாக பேசினார். இப்படி தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கியதால் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
