சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2160 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. தங்கம் விலை சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் 1,14,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,800 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
